முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீர் ரெய்டு!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீரென இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, புதுக்கோட்டை, திருச்சி உள்பட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சோதனை செய்து வருவதாகவும் இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விவரங்கள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும், தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்ததாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விஜய் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் கேசி மணி, எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி ஆகியோர்களின் வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்திய நிலையில் தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment