நடந்தால் மின்சாரம் கொடுக்கும் ஷூ.. 9ஆம் வகுப்பு மாணவரின் சாதனை கண்டுபிடிப்பு..!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கண்டுபிடித்த ஷூவை அணிந்து நடந்தால் மின்சாரம் கிடைக்கும் என்று அந்த மின்சாரத்திலிருந்து மொபைல் சார்ஜிங் உள்பட பல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் சௌபிக் ஷேக். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது தனது மாமாவின் எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்துள்ளார் என்பதும் அப்போது எலக்ட்ரானிக் மீது அவருக்கு ஆர்வம் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

smart shoe2 பள்ளியிலும் அறிவியல் கண்காட்சிகளை ஆர்வத்துடன் பார்க்கும் இவஎர், காலனியில் நடக்கும் போது மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்தார். 2000 mAhபேட்டரி எளிதில் சார்ஜ் செய்யும் வகையில் இந்த ஷூ மூலம் கிடைக்கும் என்றும் ஒரு கிலோமீட்டர் நடந்தால் இந்த பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.

இப்போதைக்கு இந்த ஸ்மார்ட் ஷூ அமைப்பு வெளிப்புறமாக செய்யப்படுகிறது என்றும் ஒரு சில நாட்களுக்குள் அனைத்து கேட்ஜெட்டுகளும் அடிப்பகுதியில் கட்டமைக்கப்படும் என்றும் மாணவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’இந்த ஸ்மார்ட் ஷூவை நான் தூக்கி எறியப்பட்ட சில பொருள்களில் இருந்து செய்தேன் என்றும் இந்த காலணியில் குழந்தைகளுக்கு மிகவும் வசதியான ஜிபிஎஸ் அமைப்பும் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

smart shoe1சில நேரங்களில் குழந்தை திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ அந்த குழந்தையை எளிதில் இந்த ஷூவை அணிந்து இருந்தால் கண்டுபிடித்து விடலாம் என்றும் அதுமட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் வீட்டில் இருக்கும்போதே ஜிபிஎஸ் மூலம் தாங்கள் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஷூவில் ஸ்பை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும் சந்தேகத்திற்கு இடமான நபர் யாராவது குழந்தையை அணுகினால் அல்லது தவறான நோக்கத்தில் நெருங்கி வந்தால் நாம் கண்டுபிடித்து உடனடியாக சுகாரித்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்

இந்த ஷூவின் தயாரிப்பு தற்போது ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது என்றும் ஷூ நிறுவனம் நிதி உதவி செய்தால் இன்னும் பெரிய அளவில் இதை விரிவுபடுத்தி பொதுமக்களுக்கு பயன்படுத்தும் வகையில் உற்பத்தி செய்து தரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews