பால்கனியில் தவறி விழுந்த குழந்தை பலி!!

சென்னை மதுரவாயலில் வீட்டின் பால்கனியில் இருந்து குழந்தை தவறி விழுந்த 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சென்னை மதுரவாயலில் கங்கையம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ் – பூர்ணிமா. இவர்களுக்கு 2 வயதில் திவ்யா என்ற குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது.

வேறு நபருடன் ரிலீஸ் செய்த மனைவி: கணவரால் நேர்ந்த விபரீதம்..!!!

இந்நிலையில் நேற்று முன்தினம் மாடியில் விளையாடி கொண்டிருந்த போது கால்தவறி பால்கனியில் கீழே விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் , மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

சட்டவிரோத குவாரிகள் – ஐகோர்ட் கிளை புதிய உத்தரவு..!!

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment