பட்டியலின மக்களை கோயிலுக்கு அழைத்து சென்ற எஸ்பி.. எதிர்ப்பு தெரிவித்து சாமியாடிய பெண் மீது வழக்கு!

பட்டியல் இன மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்ற எஸ்பி-ஐ மிரட்டும் வகையில் சாமி வந்தது போல் ஆடிய பூசாரியின் மனைவி சிங்கம்மாள் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கைவயல் என்ற பகுதியில் பட்டியல் இன மக்களை அந்த பகுதியில் உள்ள கோவிலுக்குள் நுழைய மறுக்கப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கோவிலுக்கு அழைத்துச் செல்ல அந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி முன்வந்தார். அவர் அந்த பகுதி பட்டியல் இன மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது கோவில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் என்பவர் சாமி வந்தது போல் ஆடி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து அவர் மீது எஸ்.எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த ஊரைச் சேர்ந்த டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை கடைபிடித்த நிலையில் கடைக்காரர் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீது காவல்துறையினர் வழக்கு செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.