குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு; தமிழக காவல்துறையினர் மீது வழக்கு பதிவு!: எஸ்.பி நிஷா

நேற்றைய தினம் நம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்தது. ஏனென்றால் துப்பாக்கி சூடு மையத்திலிருந்து தவறுதலாக குண்டு பாய்ந்து சிறுவன் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் சிறுவனின் பெற்றோர்கள் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராடினார். அதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

pudhukottai gun shoot spot

அதன்படி டிசம்பர் 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துப்பாக்கி சூடு பயிற்சி மையத்தின் போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு வீட்டில் இருந்த சிறுவன் மீது பாய்ந்தது. இதனால் படுகாயமடைந்த திருடன் தஞ்சை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தமிழக காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் இறந்த வழக்கில் தமிழக காவல்துறையினரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட தமிழக காவல் துறையினரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று எஸ்பி நிஷா கூறியுள்ளார். மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல் துறையினரும், திருச்சி காவல்துறையினரும் சிறுவன் உயிரிழந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் விளைவிக்க காரணமாக இருந்ததாக புதிய பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக வெடிபொருள் கையாளுதல், விபத்துக்கு காரணமாக இருத்தல் போன்ற பிரிவுடன் புதிய பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. துப்பாக்கி, தோட்டா ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பி நிஷா தகவல் அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment