
செய்திகள்
கடற்படையில் காவல் பணி மோசடி-கேப்டன் மீது வழக்கு பதிவு!!
தொடர்ந்து மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அதிலும் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்பவர்களின் எண்ணிக்கை ஆங்காக நடைபெற்று கொண்டு தான் வருகிறது.
அந்த வகையில் கடற்படையில் காவல் பணி என மோசடி செய்து பல லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. கடற்படை காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கேப்டன் சமீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் போலி கடிதத்தை காட்டி இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக பணம் பறிப்பு என்று புகார் அளித்துள்ளது. பணி நியமன தேர்வு மும்பை கொலாபாவில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை கப்பலான குஞ்சலியில் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்கான நுழைவு கட்டணம், சீருடை கட்டணம், ஐடி கார்டு கட்டணம் என பல வகைகளில் பணம் பறிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக போலி நபர் மோசடி செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
