
பொழுதுபோக்கு
திருமணநாளில் சர்ச்சையில் சிக்கிய விக்கி – நயன்!
கோலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் திருப்பதியில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அங்கு அனுமதி கொடுக்காததால் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் நடந்து முடிந்தது. இவருடைய திருமணத்திற்கு பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் என்ட்ரி கொடுத்து மணமக்களை வாழ்த்தினர்.
இதனிடையே நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைப்பெற்ற வளாகத்தின் வெளியே 3 விபத்துக்கள் நிகழ்ந்துள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமண வளாகத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு விருந்தினர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய சூழல் உருவாகியது.
மேலும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இதுவரையில் 3 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் கார் விபத்து ஏற்பட்டப்போது இளம்பெண் ஒருவர் கடுமையாக வாக்குவாதம் செய்யும் வீடியோவானது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் திருமணம் நடைப்பெற்ற நாளில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
