#BREAKING பல்வீர் சிங் மீது பாய்ந்தது நடவடிக்கை; 8 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!

பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது மேலும் இரண்டு வழக்குகளை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி விசாரணை நடத்துவதற்காக வருகிற ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை நெல்லையில் உள்ள சிபிசி டி அலுவலகத்தில் ஆஜராக 8 பேருக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.