Connect with us

நீதிமன்ற வளாகத்தில் திடீரென தீ பிடித்து எரிந்த காரால் பரபரப்பு…

202201211529568809 Tamil News Thirupathur News Set fire to the hotel SECVPF

தமிழகம்

நீதிமன்ற வளாகத்தில் திடீரென தீ பிடித்து எரிந்த காரால் பரபரப்பு…

வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த டாடா சுமோ திடீர் தீ பற்றி எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோ கார் திடீரென தீ பற்றி எரிந்து. தீ மலமலவென கார் முழுவதும் பற்றி எரிந்து நாசமானது. அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லேடிஸ் சைக்கிள் ஒன்றும் தீக்கீரையானது.

தகவல் அறிந்து விரைந்து வந்த வேலூர் தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்றம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்து சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top