சென்னையில் சோகம்! அதிவேகத்தில் வந்த கார்… பெண் ஐடி ஊழியர் பலி!!

சென்னை அடுத்த மதுரபாக்கம் பகுதியில் அதிவேகமாக வந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஐடி ஊழியர் பலி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி தென்காசியை சேர்ந்த 26 வயதான காயத்ரி என்பவர் பிரபல ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நண்பர்களான அஷ்வின் உள்ளிட்ட 4 பேர் வார விடுமுறை கொண்டாடுவதற்காக அதிவேகமாக காரில் கோவளம் வரையில் சென்றுள்ளனர்.

பொங்கல் பரிசு ரூ.1000 டோக்கன் எப்போது கிடைக்கும்? – விவரம் இதோ!

இந்த சூழலில் மீண்டும் பள்ளிக்கரணை செல்வதற்காக காரில் சென்றுள்ளனர். பின்னர் அஷ்வின் காரை அதிவேகமாக ஓட்டிவந்த நிலையில் மாம்பாக்கம்-மேடவாக்கம் பிரதான சாலையில் கார் சென்றுகொண்டிருந்தது.

அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைத்தடுமாறி சாலையின் தடுப்பு சுவற்றில் மீது பயங்கரமாக மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

செங்கல் சூளையில் தீ விபத்து: 9 பேர் உடல் கருகி பலி..!!

பின்னர் காயத்ரி உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது காயத்ரியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.