அமைதியா தூங்க ஒரு பேருந்து பயணம்…. வேற லெவல் ஐடியாவா இருக்குல…..

நாமக்கெல்லாம் தூக்கம் வரலைன்னா என்ன பண்ணுவோம். எதாவது புக் படிக்கறது இல்லைனா படம் பார்க்குறது இந்த மாதிரி விஷயங்கள் பண்ணி தூங்குறதுக்கு டிரை பண்ணுவோம். ஆனால் நிம்மதி தூங்கறதுக்காகவே ஒரு தனியார் நிறுவனம் பேருந்து பயணத்தை தொடங்கிருக்காங்கலாம். நம்ம நாட்ல இல்லைங்க ஹாங்காங்ல.

அதன்படி ஹாங்காங்குல இருக்குற ஒரு உள்ளூர் டூர் ஏஜன்சி தனிப்பட்ட பேருந்து சர்வீசை தொடங்கியுள்ளது. சுமார் 52 மைல் வரை செல்லும் இந்த பயணம், ஹாங்காங் வாசிகள் நிம்மதியாக ஓய்வெடுக்கவும், தொந்தரவு இல்லாமல் தூங்குவதற்கும் மட்டும் பிரத்யேகமாக தொடங்கி உள்ளார்கள்.

பொதுவாகவே நாம நீண்ட தூரம் பயணம் செய்யும் போது எந்தவித கவலையும் இல்லாமல் நிம்மதியாக தூங்குவோம் அல்லவா. அதை வைத்து தான் இந்த நிறுவனம் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. சுமார் ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய பயணத்திற்காக டூர் ஏஜென்சி ஒரு டபுள்-டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

லோயர் டெக்கில் உள்ள இருக்கைகளுக்கு $12 அப்பர் டெக்கில் உள்ள இருக்கைகளுக்கு $51 டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் “Bus ride to nowhere” என்று இந்த திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளனர். அதுமட்டும் இல்லைங்க பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கவும், இடையில் பயணிகள் தூக்கம் தடைபடக் கூடாது என்பதற்காகவும் குறைவான டிராஃபிக் சிக்னல் இருக்கும் ரூட்டை தேர்வு செய்து உள்ளார்கள்.

இதனை தொடங்கியுள்ள ஃபிராங்கி என்பவர் இதுகுறித்து கூறியதாவது, “இந்த திட்டத்தை இரண்டு வகையான பயணிகளுக்காக உருவாக்கியுள்ளோம். பலரும் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு சில மணி நேரங்களாவது தூங்குவதற்கு அமைதியான இடம் தேவைப்படுகிறது. எனவே, எந்த விதமான தொந்தரவும் இன்றி நிம்மதியாக தூங்குவதற்கு இந்த பேருந்து டூர் உருவாகப்பட்டுள்ளது.

மேலும், ஹாங்காங்கை சுற்றிப் பார்க்க விரும்புபவர்கள், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுற்றிப் பார்க்க விரும்பினால், அவர்களுக்கும் இது வசதியாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார். பரவாயில்லை நல்ல ஐடியா தான். ஆனா பலரும் காசு குடுத்து யாராவது தூங்குவாங்களானு கேட்கறாங்க. ஹாங்காங்ல இந்த மாதிரி திட்டத்துக்கெல்லாம் பயங்கர வரவேற்பு இருக்கு. அங்குள்ள மக்கள் பலரும் மன அழுத்தத்தில் இருப்பதால் இதுபோன்று கட்டணம் செலுத்தி மன அமைதியை பெற தயாராக உள்ளார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment