கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிகிறது.
இந்நிலையில் இருசக்கர வாகனம் மோதியதில் பேருந்து மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனிடையே பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியானதாகவும், இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.