சென்னையில் மது ஏடிஎம்.. பணம் செலுத்தினால் பீர் வரும்..!

ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு ஸ்வைப் செய்தால் பணம் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இயந்திரத்தை போலவே பல இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக சமீபத்தில் சமீபத்தில் பிரியாணி தரும் இயந்திரம் அமைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. பணம் செலுத்தினால் பிரியாணி வருவது போல் தற்போது பணம் செலுத்தினால் மது வரும் என்ற மெஷின் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தானியங்கி மது விற்பனை மையத்தை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை மையத்தில் பணம் செலுத்தினால் நமக்கு தேவையான மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏடிஎம் எந்திரம் போல் மது மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் இந்த மையத்தில் பணம் செலுத்தினால் நமக்கு தேவையான மது அல்லது பீர் வகைகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தானியங்கி மது விற்பனையை மது பிரியர்கள் பலர் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு குடிமகன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த கிடைத்தாலும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோயம்பேடு வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் வளாகத்தில் தானியங்கி மது விற்பனை மையத்தை தொடங்கினால் அது பல சிக்கல்களை உருவாக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

டாஸ்மாக் நிர்வாகத்தின் வருவாய் அதிகரிப்பதாக இந்த ஏற்பாடு என்றாலும் இது பொதுமக்களுக்கு பிரச்சனையை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் இடம் அருகே பார் இல்லை என்பதால் மதுவை வாங்க மட்டும் தான் முடியும், அங்கேயே உட்கார்ந்து அருந்த முடியாது என்பதால் எந்த பிரச்சனையும் வராது என்றும் ஒரு சில தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் நடைமுறையில் இந்த இயந்திரத்தால் பிரச்சனைகள் வருமா அல்லது எந்த பிரச்சனையும் வராதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews