சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது முதியவர் போக்சோவில் கைது

பழனியில் போக்சா வழக்கில் 60 வயது முதியவர் கைது. மகளீர் காவல் நிலைய போலீஸார் நடவடிக்கை. பழனி அருகே புளியமரத்து  செட்டு பகுதியில் வசித்துவருபர் குமார். மனைவியை பிரிந்து வாழும் குமார்  கட்டிட வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

அதே பகுயில் நான்காம்  வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் பெற்றோர் பழனி மகளீர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை பெற்ற பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார்  குமாரை பிடித்து வந்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொடங்க தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment