மக்களே உஷார்; மர்ம காய்ச்சலால் 6 வயது சிறுமி பலி; அடுத்தடுத்து தொடரும் அவலம்!

வைரஸ் காய்ச்சலுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ராஜபாண்டி நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன் கூலி தொழிலாளி இவரது ஆறு வயது மகள் மகாலட்சுமி கடந்த 20 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மகாலட்சுமிக்கு கடந்த 20 நாட்களாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை உயராததால் சிறுமி மகாலட்சுமி பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி மகாலட்சுமி உயிரிழந்தது தொடர்பாக கேட்டபோது டெங்கு காய்ச்சல் இல்லை வைரஸ் காய்ச்சல் இதன் காரணமாக அவரது மூளை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் மகாலட்சுமியின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளது. இதேபோன்று கடந்த சில நாட்களில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பல்வேறு விதமான மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கோரம்பள்ளம் அருகே உள்ள அபிராமி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் மற்றும் ஏரல் பகுதியைச் சேர்ந்த சிறுமி உள்ளிட்டோர் பலியாகி உள்ளனர்.

ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை நிர்வாகம் முறையாக இவற்றை வெளியே தெரிவிக்காமல் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளியே காய்ச்சலுக்காக பொது மக்களுக்கு உதவ அமைக்கப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவு எப்பொழுதும் மூடியே கிடக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சல்களுக்கு தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்பு ஏற்படுவதால் சாதாரண ஏழை எளிய பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் உயிரைக் காக்க தனியார் மருத்துவமனையை நோக்கி சிகிச்சைக்காக செல்லும் அவல நிலையும் உருவாகியுள்ளது.

மேலும் இது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள உறைவிட மருத்துவர் சைலஸ் யிடம் கேட்டபோது குழந்தை காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் மோசமான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள் இங்கு மருத்துவமனையில் தனி செவிலியர்கள் மற்றும் டாக்டர் நியமிக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டதாகவும் இந்த குழந்தை மருத்துவ பரிசோதனையில் டெங்கு பாதிக்கப்பட்டதற்கு எந்த அறிகுறியும் இல்லை சாதாரண காய்ச்சல் தான் இருந்தாலும் குழந்தை இறந்ததாக அவர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.