Connect with us

‘கன்னியாகுமரி முதல் காஷ்மீர்’ 3500 கிலோ மீட்டர் பாதயாத்திரை-ராகுலோடு இணைந்த சமூக செயற்பாட்டாளர்கள்!!

rahul gandhi bharat hodo

செய்திகள்

‘கன்னியாகுமரி முதல் காஷ்மீர்’ 3500 கிலோ மீட்டர் பாதயாத்திரை-ராகுலோடு இணைந்த சமூக செயற்பாட்டாளர்கள்!!

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் காங்கிரஸ் எந்த ஒரு மாநிலத்திலும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதைவிட காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலத்திலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி கட்சி பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்பு அவர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இதில் ராகுல் காந்தி  பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவரோடு சில தலைவர்கள் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி ஏப்ரல் செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் தொடங்க உள்ள பாதயாத்திரையில் சமூக செயற்பாட்டாளர்கள் அருணாராய் மற்றும் யோகேந்திர யாதவ் பங்கேற்கின்றனர். பாரத் சோடோ யாத்ரா என்ற நடைபயணத்தை ராகுல் காந்தி அடுத்த மாதம் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்க உள்ளார்.

செப்டம்பர் 7ஆம் தேதியில் கன்னியாகுமரியில் தொடங்க உள்ள 3500 கிலோமீட்டர் நடைபெறும் காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று பாரத யாத்திரையில் பங்கேற்க உள்ளதாக அருணா ராய் மற்றும் யோகேந்திர யாதவ் அறிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top