மீண்டும் சோகம்!! குளிர்பானம் குடித்த 14 வயது சிறுவன் பலி!!

விருதுநகர் அழகாபுரியில் பைபாஸ் சாலை ஓட்டலில் குளிர்பானம் குடித்த 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபசின்ராஜ். இவரது மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உட்பட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவிழாவிற்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் பேருந்தில் சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது பேருந்து நிறுத்தத்தின் போது 14 வயது சிறுவனுக்கு சில்லி மற்றும் அரை லிட்டர் குளிர்பானம் வாங்கி கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழகாபுரியில் குளிர்பானம் குடித்த சிறுவன் பேருந்தில் ஏறிய நிலையில் சிறுவனுக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே திண்டிவனம் அருகே பேருந்து நின்றபோது சிறுவன் கண் விழிக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குளிர்பானம் குடித்து 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment