கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பேய் விரட்டுவதாக கூறி 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த பாலராமபுரம் பகுதியில் வசித்து வருபவர் 53 வயதான ஜோஸ் பிரகாஷ். இவர் பாஸ்டராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு 13 வயது சிறுமிக்கும், அவரது 12 வயதான தம்பிக்கும் பேய் பிடித்து இருப்பதாகவும், இதனை உடனடியாக விரட்ட வேண்டும் என பாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேய் விரட்டுவதாக கூறிவிட்டு, 13 வயது சிறுமி, 12-வயதான சிறுவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்து அதிவிரைவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வானது நீதிபதி முன் வந்த நிலையில் பாஸ்டர் ஜோஸ் பிரகாஷ்க்கு ஆயுள் தண்டனை, ரூ.2.75 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.