Connect with us

ஜம்முவில் 10 வயது சிறுவன் கொடூர கொலை!!

கொலை

செய்திகள்

ஜம்முவில் 10 வயது சிறுவன் கொடூர கொலை!!

கடந்த சில நாட்களாகவே ஜம்மு- காஷ்மீரில் பயங்கர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது 10 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் சைத்பூர் கிராமத்தை சேர்ந்தவன் 10 வயதான ப்ரணே குமார். இவன் பள்ளியில் படித்து வரும் சூழலில் மாலை நேரங்களில் டியூஷன் செல்வதாக கூறப்படுகிறது. அந்தவகையில்  சிறுவன் வழக்கம்போல் டியூசன் சென்ற சூழலில் பிறகு வீடு திரும்பாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பதறிப்போன அவர்களுடைய பெற்றோர் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை தீவிரமாக  தேடி வந்தனர். இதனிடையே நள்ளிரவில் ஒரு சாக்கு மூட்டை ஒன்று இருந்ததை பார்த்த அவர்களுடைய பெற்றோர் அதனை பிரித்து பார்த்தனர்.

அப்போது சிறுவனை டேப்பால் வாயை மூடி, கைகால்களை கட்டிய நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதை கண்டு அவர்களுடைய பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே சந்தேகத்தின் பேரில் போலீசார் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top