புரோட்டின் சத்து நிறைந்த சென்னா பிரியாணி ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டைக்கடலை – 150 கிராம்
தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 200 கிராம்
தேவையான பொருட்கள் : வெங்காயம் – 1
தேவையான பொருட்கள் : தக்காளி – 2
தேவையான பொருட்கள் : இஞ்சி – சிறு துண்டு
தேவையான பொருட்கள் : பூண்டு – 6 பல்
தேவையான பொருட்கள் : உப்பு – சுவையும் ஏற்ப
தேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : மிளகாய்த்துள் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : கரம் மசாலா – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : தயிர் – 1 தேக்கரண்டி
தேவையான பொருட்கள் : புதினா இலை- சிறிதளவு
தேவையான பொருட்கள் : மல்லி இல்லை – சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள் : பட்டை-2,
தாளிக்க தேவையான பொருட்கள் : கிராம்பு – 2
தாளிக்க தேவையான பொருட்கள் : ஏலக்காய்- 5,
தாளிக்க தேவையான பொருட்கள் : பிரியாணி இலை – 1
தாளிக்க தேவையான பொருட்கள் : முந்திரி- 10
தாளிக்க தேவையான பொருட்கள் : நெய் – 3 தேக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள் : எண்ணைய் – தேவையான அளவுக்கு
செய்முறை : பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி குக்கரில் 2 விசில் வரும் வரை உதிரியாக வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
செய்முறை : அடுத்து வெள்ளை சென்னாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு, மஞ்சள் போட்டு வேக வைத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு இவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
செய்முறை : கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கிராம்பு , பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி போட்டு தாளித்த பின் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து, வதக்கவும். தூக்கில் இருந்து எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
செய்முறை : விழுது நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். இதில் சிறிதளவு தனியா தூள் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
செய்முறை : அடுத்ததக்க தயிர், பாதி எலுமிச்சை சாறு சேர்த்து ஒள்ளவும் அடுத்து அதில் புதினா, மல்லி இலை வேகவைத்த சென்னா சேர்த்து கிளறி, இறுதியில் சாதம் சேர்த்து கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து கொள்ளவும் .
Fill in some text