நாவில் எச்சில் ஊறவைக்கும் மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல்!
தேவையான பொருட்கள்:- உருளைக்கிழங்கு – 3
தேவையான பொருட்கள்:- எண்ணெய் – 1/4 கப்
தேவையான பொருட்கள்:- கடுகு – 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- சோம்பு – 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- வரமிளகாய் – 2
தேவையான பொருட்கள்:- கறிவேப்பிலை – சிறிது
தேவையான பொருட்கள்:- பூண்டு – 6 பற்கள்
தேவையான பொருட்கள்:- வெங்காயம் – 1
தேவையான பொருட்கள்:- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருட்கள்:- கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தேவையான பொருட்கள்:- உப்பு – தேவையான அளவு
தேவையான பொருட்கள்:- கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருட்கள்:- கொத்தமல்லி – சிறிது
செய்முறை:- முதலில் ஒரு சமையல் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து எடுத்து கொள்ளவும்.
செய்முறை:- பின்னர் அதில் சிறிதளவு பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
செய்முறை:- பின்பு உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அதை எடுத்து நன்கு மசித்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை:- அந்த கூட்டுடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும் மிளகாய் தூள் வாசனை போகும்வரை கிளர வேண்டும்.
செய்முறை:- பிறகு அத்துடன் கடலை மாவு சேர்த்து 5 முதல் 8 நிமிடம் நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி இறக்கினால், ருசியான மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு மசியல் ரெடி!!