சுறா புட்டுக்கு இணையாக வாழைக்காய் புட்டு ரெடி!
தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 1
தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 1 கப்
தேவையான பொருட்கள்: தேங்காய் – 2 கப்
தேவையான பொருட்கள்: உப்பு – சிட்டிகை
தேவையான பொருட்கள்: சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை முதலில் ஒரு வாழைக்காயை குக்கரில்10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
செய்முறை பின் அரிசி மாவில் வெந்நீர் ஊற்றி, உப்பு , வேக வைத்த வாழைக்காயை சேர்த்து, புட்டு மாவு பதத்திற்கு பிணைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை அடுத்து புட்டு வேக வைக்கும் பாத்திரத்தில், நான்கில் ஒரு பங்கு மாவைப் போட்டு, ஒரு பங்கு துருவிய தேங்காயை போட்டு, தேவையான அளவு சர்க்கரையை தூவி மூட வேண்டும் .
செய்முறை பின்பு புட்டு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும், 20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது சூப்பரான வாழைக்காய் புட்டு ரெடி.