ரோட்டுக்கடை சுவையில் காலிஃப்ளவர் ஃப்ரை ரெசிப்பி!

தேவையான பொருள்கள் காலிஃப்ளவர் – ஒரு கப் ,

தேவையான பொருள்கள் சோள மாவு – 3/4 கப்,

தேவையான பொருள்கள் கடலைமாவு – 1/4 கப்,

தேவையான பொருள்கள் மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் தனியா தூள் – அரை டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் கரம் மசாலா தூள் – கால் டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,

தேவையான பொருள்கள் உப்பு – தேவைக்கு ஏற்ப,

தேவையான பொருள்கள் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

செய்முறை முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து போடி துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு நீரில் சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு நீரை வடிகட்டி காலிஃப்ளவரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை பிறகு சோயா மாவு, கடலைமாவு, உப்பு, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொண்டால் அஜீரண கோளாறுகளை தவிர்க்க முடியும்.

செய்முறை அதனுடன் காலிபிளவரை கலந்து கொள்ளவும் , தேவைக்கு ஏற்ப உப்பு ,காரம் சேர்த்து கொள்ளவும்.

செய்முறை பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி கலந்து வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு சிவக்க பொறித்து எடுக்கவும்.க்ரிஸ்பான காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி.