ஹோட்டல் ஸ்பெஷல் செட்டிநாடு முட்டை குருமா!

தேவையான பொருட்கள் : முட்டை – 4

தேவையான பொருட்கள் : வெங்காயம் – 1

தேவையான பொருட்கள் : தக்காளி – 1

தேவையான பொருட்கள் : மிளகாய் தூள் -அரை தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : கடுகு – கால் தேக்கரண்டி

தேவையான பொருட்கள் : கொத்தமல்லி – சிறிதளவு

தேவையான பொருட்கள் : கருவேப்பிலை – சிறிதளவு

வறுத்து அரைக்க: இஞ்சி -சிறிய துண்டு

வறுத்து அரைக்க: மிளகு – 1 தேக்கரண்டி

வறுத்து அரைக்க: சீரகம் – 1 தேக்கரண்டி

வறுத்து அரைக்க: தேங்காய் துருவல் – கால் மூடி

வறுத்து அரைக்க: கருவேப்பிலை – தேவைக்கு ஏற்ப

வறுத்து அரைக்க: எண்ணெய் – 1 தேக்கரண்டி

வறுத்து அரைக்க: தனியாதூள் – 2 தேக்கரண்டி

வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் – 3

வறுத்து அரைக்க: பூண்டு – 4 பல்

செய்முறை : முட்டையை வேக வைத்து 2 ஆக நறுக்கி கொள்ளவும். ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி வறுக்க வேண்டியவை அனைத்தையும் வறுத்து கொள்ளவும், பின்பு ஆற வைத்து பொருட்களை நன்றாக அரைத்து கொள்ளவும்.

செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை ,வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

செய்முறை : தக்காளி வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

செய்முறை : கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.