சுவையான லேகியம் செஞ்சு பாருங்க!!
தேவையான பொருட்கள் இஞ்சி – 250 கிராம்
தேவையான பொருட்கள் வெல்லம் – 1/2 கப்
தேவையான பொருட்கள் தேன் – 1/4 கப்
தேவையான பொருட்கள் நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தேவையான பொருட்கள் மஞ்சள் பொடி – சிறிதளவு
தேவையான பொருட்கள் தனியா பொடி – 2 டீஸ்பூன்
தேவையான பொருட்கள் சீரகப்பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை இஞ்சியை நன்றாக கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி சுத்தம் செய்த பிறகு திரும்பவும் காய்ச்ச வேண்டும்.
செய்முறை நன்றாக நுரைத்து கம்பி பதத்திற்கு வரும்பொழுது அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து மிதமான தீயில், கைவிடாது கிளறிக்கொண்டே இருக்கவும் .
செய்முறை 2 நிமிடங்களுக்கு பிறகு மஞ்சள் பொடி, தனியா பொடி, சீரகப்பொடி சேர்த்து கிளறவும்.
செய்முறை 6, 7 நிமிடங்கள் கிளறியபின் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக வரும். அந்த நேரத்தில் நெய் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கினால் லேகியம் ரெடி.