தித்திப்பான உக்காரை ரெசிப்பி!

தேவையான பொருள்கள்: கடலைப்பருப்பு – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: துவரம்பருப்பு – ஒரு கப்,

தேவையான பொருள்கள்: வெல்லம் – 150 கிராம்,

தேவையான பொருள்கள்: முந்திரிப் பருப்பு – 10,

தேவையான பொருள்கள்: ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

எப்படி செய்வது? கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து கெட்டியாக அரைச்சிக்கோங்க.

எப்படி செய்வது? வாணலியில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்க.

எப்படி செய்வது? அப்புறமா அதை வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, கெட்டியாக பாகு காய்ச்சிக்கோங்க.

எப்படி செய்வது? இட்லித் தட்டில் சிறிது நெய் தடவி, அரைத்த பருப்பை வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து, ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் உதிரி உதிரியாக வரும்.

எப்படி செய்வது? இதனுடன் பாகு சேர்த்து நன்கு கலந்து, ஏலக்காய்த்தூள், முந்திரிப் பருப்பு சேர்த்தால் உக்காரை ரெடி.