சுவையான மஸ்ரூம் சில்லி ரெசிப்பி!!
தேவையானவை: காளான் – அரை கிலோ
தேவையானவை: வெங்காயம்-1
தேவையானவை: பச்சை மிளகாய் – 5
தேவையானவை: குடைமிளகாய் – 1
தேவையானவை: வெங்காயத்தாள் – கைப்பிடியளவு
தேவையானவை: இஞ்சிபூண்டு பேஸ்ட் – 4 ஸ்பூன்
தேவையானவை: கார்ன் ஃப்ளார் – 1 ஸ்பூன்
தேவையானவை: மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: தக்காளி சாஸ்- 3 ஸ்பூன்
தேவையானவை: உப்பு – தேவையான அளவு
தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை : 1. காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயத் தாளினை நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் போட்டு நன்கு வதக்கி இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
செய்முறை : 3. அடுத்து ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளார் மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து இதனை எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
செய்முறை : 4. அடுத்து வதக்கிய கலவையுடன் தக்காளி சாஸ் ஊற்றி, பொரித்த காளானைப் போட்டு வதக்கி வெங்காயத் தாளை தூவி இறக்கினால் மஸ்ரூம் சில்லி ரெடி.