சுவை நிறைந்த காளான் கிரேவி!!

தேவையானவை: காளான் – அரை கிலோ

தேவையானவை: வெங்காயம் – 2

தேவையானவை: தக்காளி – 2

தேவையானவை: பச்சை மிளகாய்- 3

தேவையானவை: மிளகாய்த் தூள் – 1/4 ஸ்பூன்

தேவையானவை: தனியாத் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: சோம்பு – 1 ஸ்பூன்

தேவையானவை: பட்டை- 3

தேவையானவை: கிராம்பு – 2

தேவையானவை: எண்ணெய்- தேவையான அளவு

தேவையானவை: உப்பு- தேவையான அளவு

தேவையானவை: கறிவேப்பிலை- தேவையான அளவு,

தேவையானவை: கொத்தமல்லி இலை- தேவையான அளவு

செய்முறை : 1. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். காளானை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

செய்முறை : 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நன்கு வதக்கிக் கொள்ளவும். அடுத்து இதனை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை : 3. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்து அரைத்த கலவையைப் போட்டு வதக்கவும்.

செய்முறை : 4. அடுத்து காளானைப் போட்டு வதக்கி மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

செய்முறை : 5. இறுதியில் எண்ணெய் பிரிந்துவரும்போது கொத்துமல்லி இலை தூவி இறக்கினால் காளான் குழம்பு ரெடி.