கத்தரிக்காய் புளிக் குழம்பு ரெசிப்பி!!

தேவையானவை: கத்திரிக்காய் – 6

தேவையானவை: சின்ன வெங்காயம் – 10

தேவையானவை: தக்காளி – 1

தேவையானவை: கடுகு – 1/4 ஸ்பூன்

தேவையானவை: உளுந்து – 1/4 ஸ்பூன்

தேவையானவை: மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

தேவையானவை: மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

தேவையானவை: தனியா தூள் – 2 ஸ்பூன்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: கறிவேப்பிலை – சிறிதளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

தேவையானவை: புளி – எலுமிச்சை அளவு

தேவையானவை: தயிர்- 3 ஸ்பூன்

செய்முறை : 1. கத்தரிக்காயின் காம்புகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை தண்ணீரில் நன்கு ஊறவைத்துக் கொள்ளவும்.

செய்முறை : 2. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

செய்முறை : 3. அதன்பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

செய்முறை : 4. அடுத்து புளிக் கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.

செய்முறை : 5. இறுதியில் தயிர் சேர்த்துக் கலந்து இறக்கினால்  கத்தரிக்காய் புளிக் குழம்பு ரெடி.