கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மேல் சாமல்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் – பாரதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் தம்பதியினர் இருவரும் பெங்களூரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களது மகளுக்கு கடந்த 2 வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்தில் வீட்டில் படுக்கையறை நீண்ட நேரமாக திறக்கப்படால் இருந்ததால் சந்தேகமடைந்த சிறுமியின் பாட்டி கதவை தட்டியுள்ளார்.
அடுத்த 2 மணி நேரத்தில்… இந்த மாவட்டங்களில் மழை?
அப்போது நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால் அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது மாணவி மாணவி சேலையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் உதவியுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புயல் எச்சரிக்கை: பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாமல்பட்டி போலீசார் சிறுமியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது குறித்து சிறுமியின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.