இலங்கை அரசே! உடல் வரும் வரை உண்ண மாட்டோம்!! 2வது நாளாக போராட்டம்!!!

மீனவர்கள்

தமிழகத்தில் வாழும் மீனவர்கள் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் காணப்படுகின்றனர். அவர்கள் கடலுக்கு  மீன் பிடிக்க சென்றால் தொடர்ச்சியாக இலங்கை கடலோர படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனர்.மீனவர்கள்

பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்தநிலையில் இலங்கை அரசால் தாக்கி உயிரிழந்தவரின் உடலை  தராததால் மீனவர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 2 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படை கப்பல் மோதி இந்திய மீனவர் ராஜ்கிரன் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட ராஜ்கிரணின் உடலை தர மறுக்கும் இலங்கை அரசை கண்டித்தும் உடலை மீட்டு தரக்கோரி அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும் அந்தப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பலரும் உள்ளனர். இனிமேல் இது மாதிரியான சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் எழுதிய வாசகங்கள் அடங்கிய பேனர் உடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் ராஜ்கிரன்  தர மறுக்கும் இலங்கை அரசிற்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

படகு மீது கப்பலை மோத செய்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதால் தான் ராஜ்கிரன் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print