விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகள்-விளக்கம் அளிக்க நோட்டீஸ்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அங்குள்ள பள்ளியில் சென்று மேஜைகள், கண்ணாடிகளை உடைத்தனர்.

மேலும் பள்ளி வாகனங்களுக்கு தீயிட்டனர். குறிப்பாக மாணவ, மாணவிகளின் டிசி-ஐ கிழித்து எறிந்தனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் சில அதிரடி கேள்விகளையும் உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் அன்று இரவு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆயினும் கூட எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி விடுமுறை அறிவித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் இருந்து கூறப்பட்டிருந்தது.

இதனையும் மீறி நேற்றைய தினம் சுமார் 987 தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டன. இந்த விடுமுறை விட்ட 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது பற்றி 987 பள்ளிகள் பதிலளிக்கவும் நோட்டீஸ். கலவரம்  தொடர்பாக நேற்று அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளக்கத்தை கேட்ட பின் 987 பள்ளிகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment