வேலூர்: 96 ஏரிகள், 220 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பின;

ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது பெய்து வரும் கனமழையால் அனைத்து ஆறுகள் ஏரிகள் குளங்கள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.குறிப்பாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பெரும்பாலான ஏரிகள் குளங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

ஏரிகள்

இந்தநிலையில் கனமழையால் வெளிவரும் ஏரிகள் குளங்கள் மற்றும் அணைகளின் நிலவரங்களை அவ்வப்போது வெளியாகிறது. நாம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் பற்றிய நிலவரத்தை பார்ப்போம்.

வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு 96 ஏரிகள் நிரம்பி உள்ளன. வேலூர் மாவட்டத்தில் 220 குளங்களும் நிரம்பி உள்ளன. வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதியில் மொத்தம் 133 ஏரிகள் உள்ளது. மொத்தமுள்ள  133 ஏரிகளில் 40 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில் உள்ளது.

பத்து ஏரிகள் 75% கொள்ளளவை எட்டியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 807 குளங்கள் உள்ளது. மொத்தமுள்ள 807 குளங்களில்  220 குளங்கள் 100% நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொண்ணூத்தி ஒன்பது குளங்கள் 75% கொள்ளளவு நிரம்பியுள்ளன.

இதனால் வேலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான ஏரிகள் மற்றும் குளங்கள் 75% கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment