Entertainment
தெலுங்கு சினிமாவிலும் களமிறங்கியது ‘ 96 ‘ படம்!

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘ 96 ‘ திரைப்படம் .இந்த படத்தில் விஜய் சேதுபதி , த்ரிஷா ஆகியோர் ராம் , ஜானு கேரக்டரில் தத்ரூபமாக நடித்திருந்தனர் . இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் விஜய்சேதுபதியின் ராம் கேரக்டரில் ஷர்வானந்த் நடிக்க இருப்பதாகவும் , திரிஷாவின் ஜானு கேரக்டரில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இந்த தெலுங்கு டப்பிங் படத்தையும் இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்
