
News
ஆஹா எவ்வளவு நேர்மை… 7 பவுன் நகைக்கு 95 விழுக்காடு தள்ளுபடி !! கஷ்டப்பட்டு தங்கம் வாங்கிய டி.ஜி.பி…
கேரளாவில் 7 பவுன் நகையை 95% தள்ளுபடியில் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் கேரள டிஜிபி மீது விசாரணை நடத்த பரிந்துரை செய்ததாக கேரள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் போலீஸ் புலனாய்வு அதிகாரியாக இருக்கும் டி.ஜி.பி சுதேஷ் குமார் திருவனந்தபுரத்தில் ஒரு நகைக்கு மகளுடன் சென்றுள்ளார். நகை கடையில் அவர் எடுக்கும் நகைகளுக்கு 5% விழுக்காடு தள்ளுபடி தருவதாக கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ஏழு பவுன் தங்கச்சங்கிலியை 95 % விழுக்காடு தள்ளுபடி விலையில் தர வேண்டும் என சுதேஷ் குமார் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் நகை கடை உரிமையாளர்கள் 50% விழுக்காடு தள்ளுபடி தர முன்வந்தும் அவர்களை டிஜிபி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையிம் மறுநாளும் கடைக்கு சென்று மிரட்டிய போது உரிமையாளர் 95% நகை தள்ளுபடி வழங்கியதுடன் அதனை பில் போட்டு பதிவு செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உரிய சான்றுகளுடன் கேரள முதல்வர் அலுவலகத்திற்கு கடை உரிமையாளர் புகார் அளித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட கேரள உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு பரிந்துரை செய்வதாகவும் வெளிநாட்டுக்கு சென்றுள்ள கேரள முதல்வர் மீண்டும் வந்தவுடன் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து ஒரு வாரத்திற்கு முன்பே கேரள புலனாய்வு அதிகாரியாக இருந்த சுதேஷ்குமார் தற்போது சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார். மேலும், கேரள முதல்வர் கையசைத்தாள் அவருடைய பதவி பறிபோகும் என கூறுகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.
