புதுப்பொலிவுடன் மீண்டும் ஒளிபரப்பாகும் 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்…..!

பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்வதில் விஜய் டிவியை அடித்து கொள்ள ஆளே கிடையாது. அந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதிலும் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியலாகவே மாறி விட்டது.

கனா காணும் காலங்கள்

பள்ளி மாணவர்களின் வாழ்வியலை மிகவும் எதார்த்தமாக காட்சிப்படுத்தி இருந்ததால் அந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. அந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து பள்ளி முடிந்து கல்லூரி வாழ்க்கையை மையப்படுத்தி கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

கனா காணும் காலங்கள்

இந்த தொடர் மட்டுமல்லாமல் தொடரில் நடித்த நடிகர்களும் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என அனைத்திலும் நட்சத்திரங்களாக ஜொலித்து கொண்டிருக்கிறார்கள். கனா காணும் காலங்கள் தொடர் முடிவடைந்த போது ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அவர்களின் வருத்தத்தை போக்கும் விதமாக கொரோனா ஊரடங்கு சமயத்தில் கனா காணும் காலங்கள் சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது கனா காணும் காலங்கள் தொடர் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் புது நடிகர்களுடன் புதுப்பொலிவுடன் தொடங்க உள்ள இந்த சீசனும் பள்ளி பருவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். ஆனால் இந்த சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாதாம்.

அதற்கு மாறாக விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் பேவரைட் சீரியல் புதுப்பொலிவுடன் மீண்டும் உருவாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment