90s கிட்ஸின் திருமணம்- அவனுக்கு ஏதடா திருமணம்- பரிதாபத்தின் உச்சத்தில் 90ஸ் கிட்ஸ்

இணையத்தில் பிரபலமாகி வரும் மீம்ஸ்களில் இந்த 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களுக்கு இணையான மீம்ஸ்கள் எதுவுமில்லை. 90ஸ் கிட்ஸ் என அழைக்கப்படும் 90களில் பிறந்த குழந்தைகள் பலர் சர்தார்ஜி ஜோக்குக்கு இணையாக இவர்கள் கலாய்க்கப்படுகிறார்கள்.

3c8a702fb357baa30f555339cf5e8b9d

87ல் இருந்து பிறந்தவர்கள் கூட இந்த 90ஸ் கிட்ஸ் குழந்தைகளில் வரிசையில் சேர்கிறார்கள். இவர்களை பற்றி முக்கியமாக சொல்லப்படுவது இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை, பெண் கிடைக்கவில்லை என்பதுதான். இவர்களுக்கு எதிராக 2 கே கிட்ஸ் எல்லா விசயத்திலும் அட்வான்ஸாக சென்று கொண்டிருப்பதுதான் மீம்ஸ்களின் பிரதானமாக இருக்கிறது.

2கே கிட்ஸ் எல்லோரும் ரொம்ப அட்வான்ஸாக சென்று கொண்டிருப்பதும் 16 வயதிலேயே காதலில் விழ ஆரம்பிப்பதும் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரொமான்ஸ் வீடியோ போடுவதும் ரொமாண்ட்டிக் பாடலுக்கு மூவ்மெண்ட் கொடுப்பதும் பல 90ஸ் கிட்ஸ் குழந்தைகளை கவலையுற வைத்துள்ளது.

இதே நேரத்தில் 90ஸ் கிட்ஸ் இது போல காலத்துக்கு ஏற்ற விசயத்தை அறிந்து கொள்ளாமலும் காலுக்கு போட லைட் எறியுற ஷூ வாங்க நினைப்பதும் சக்திமான் சீரியலை நினைத்து கொண்டிருப்பது போல் அந்நாளைய நினைவுகளையே இன்றும் நினைத்து கொண்டிருப்பதை மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர்.

90களில் பிறந்த பலருக்கு தற்போதுள்ள விகிதாச்சாரத்தின்படி பெண்கள் மணமுடிக்க கிடைப்பது இல்லை அவர்கள் வயதுக்கேற்ற பெண்கள் குறைந்த அளவிலே உள்ளது காரணமாக இருக்கலாம்.

அதே நேரத்தில் தற்போதுள்ள 2கே கிட்ஸ் குழந்தைகள், பெண்ணே கிடைக்காவிட்டாலும் யாராவது பெண்ணை குறைந்த வயதிலேயே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் முடித்துள்ளனர் .2000 பிறந்த பலரும் காதலித்து , திருமண வாழ்க்கைக்கு தயாராகி வரும் இச்சூழலில் 90ஸ் கிட்ஸ்க்கு உரிய பெண்ணோ பெண்ணுக்கு பையனோ கிடைக்காமல் இருப்பது வேதனை கலந்த மீம்ஸ் ஆக காமெடிக்காக சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு எட்டு பெண்ணை மணந்து ஏமாற்றி செய்திகளில் அடிபட்ட 2கே கிட்ஸ் 20வயது வாலிபனை வைத்து கலாய்த்து தள்ளிய 90ஸ் கிட்ஸ் ஏராளம். ஏண்டா எங்களுக்கு திருமணத்துக்கு பெண்ணே கிடைக்கல எப்டிடா இந்த வயசில எட்டு பெண்ணை மணந்து ஏமாத்துறிங்க என மீம்ஸ்களாக போட்டு அவனை கலாய்த்து தள்ளி விட்டனர் 90ஸ் கிட்ஸ் பேச்சிலர் பாய்ஸ்.

90ஸ் கிட்ஸின் நிலைமை உண்மையில் பரிதாபம்தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...