டீசரை பார்த்து தீர்மானிக்க கூடாது-ஓவியா


4c2d4f1156b2344a8dc3ee56378151f5

களவாணு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. அந்த படம் வெற்றியடைந்த பிறகு பல படங்களில் நடித்த ஓவியாவுக்கு தமிழில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. திடீரென விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் அந்த நிகழ்ச்சியில் ஆரவ்வுடன் காதல் மோதல், தற்கொலை முயற்சி என பலவிதமான விசயங்கள் நடைபெற்று இறுதியில் ஓவியா வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றார்.

இந்நிலையில் ஓவியா சமீபத்தில் 90 எம். எல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது. சிகரெட் பிடித்தது போன்ற காட்சிகள் எல்லாம் வந்ததால் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஓவியா வெறும் டீசரை பார்த்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் என டுவிட் செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment