கமலுடன் முதல்முறையாக இணையும் 90 கிட்ஸ் வில்லன்!! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நாயகர்களுடன் வில்லனாக நடித்தவர் மன்சூர் அலிகான். இவர் சினிமா படத்தை தொடர்ந்து ஜல்லி கட்டுபோராட்டம் போன்ற சமூக பிரச்சனைகளில் இவர் கலந்துகொண்டார்.

இதன் காரணமாக அன்றைய காலம் முதல் இன்றும் வரையில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் சினிமா இண்டஸ்ட்ரியில் மீண்டும் வில்லனாக அவதாரம் எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Capture 14

குறிப்பாக அனைத்து ஹீரோக்களுடன் வில்லனாக நடித்த எனக்கு கமல்ஹாசனுடன் வில்லனாக நடிக்க வாய்ப்பு இல்லை என ஒரு நிகழ்ச்சியில் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானை ஒரு படத்திலாவது பயங்கரமான வில்லனாக நடிக்க வைத்து விடுவேன் என்ற குறிக்கோளுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

s364

அதன் படி, ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுடன் வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment