கோர விபத்து!! அரசுப் பேருந்து – பள்ளி சுற்றுலா பேருந்து மோதியதில் 9 பேர் பலி!!

கடந்த சில நாட்களாகவே விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரசு பேருந்து மீது பள்ளி சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 43 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது.

உச்சம் தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

அப்போது நள்ளிரவு 12 மணியளவில் வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி வாகனம் அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த 41 பேரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை..!!

பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளி சுற்றுலா பேருந்து மீது வேகமாக மோதியதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment