ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த 9 மாத ஆண்குழந்தை.. !

வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் 9 மாத ஆண் குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் குப்பத்தைச் சார்ந்த யுவராணி என்ற பெண் அவரது 9 மாத ஆண் குழந்தையுடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்து இருந்தார்.

அப்போது ரயில்வே நடைமேடையில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது, சிறிது நேரத்தில் திடீரெனக் குழந்தை தண்டவாளத்தில் தவறி கீழே விழுந்துள்ளது.

குழந்தை விழுந்ததைக் கவனித்த தாய், குழந்தையைக் காப்பாற்ற நினைத்த தண்டவாளத்தில் குதித்து உள்ளார்.

அப்போது எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தாய் மற்றும் குழந்தை மீது மோத, தாய்- குழந்தை இருவரும் ரயிலுக்கு அடியில் கடுமையாகச் சிக்கிக் கொண்டனர்.

இதனைப் பார்த்த ரயில்வே நிலைய அதிகாரி ரயிலை நிறுத்தக் கூற ரயிலும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றி இருந்தோர் ரயிலுக்கு அடியில் மாட்டிக் கொண்ட குழந்தை மற்றும் தாயை பத்திரமாக மீட்டனர்.

குழந்தை மற்றும் தாயை சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர்கள் இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews