சென்னை மயிலாப்பூரில் இரட்டை கொலை-9 கிலோ தங்கம் பறிமுதல்;

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியினர் இரட்டை கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை வழக்கில் கைதான இருவரிடம் இருந்து சுமார் 9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் 50 கிலோ வெள்ளி நகைகள், 3 லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட வையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இரட்டை கொலை செய்து விட்டு தப்பிய கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவி ஆகியோர் ஆந்திரா அருகே கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய மயிலாப்பூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியை கொலை செய்து புதைக்கப்பட்டனர். மயிலாப்பூரில் உள்ள வீட்டில் முதிய தம்பதி தனித்தனியாக கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்றும் காவல் ஆணையர் கண்ணன் கூறினார்.

முதிய தம்பதியை திட்டமிட்டு கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தம்பதியை மயிலாப்பூரில் கொன்று அவர்களது சடலத்தை  பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர்.

ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் ஓட்டுநர் கிருஷ்ணாவின் தந்தை பல ஆண்டுகாலமாக காவலாளியாக பணிபுரிகிறார். ஸ்ரீகாந்த் வீட்டில் ரூபாய் 40 கோடி இருப்பதாக கணித்து அதை கொள்ளையடிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர் என்றும் காவல் ஆணையர் கூறினார்.

கொலை செய்துவிட்டு நேபாளம் தப்பிச் செல்வதே இருவரின் திட்டம் அதற்குள் போலீசார் விரைவாக செயல்பட்டனர் என்றும் கூறினார். வீட்டில் சிசிடிவி கேமரா மற்றும் அதன் hard disc-களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்றும் கூறினார். பண்ணை வீட்டில் உள்ள தம்பதியின் சடலங்களைத் தோண்டியெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment