நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
ஆந்திர கடலோரப் பகுதிகளி நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் திருப்பத்தூர், வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.