Connect with us

உஷார்..!! உஷார்..!! 9 மாவட்டங்களுக்கு 3 மணி நேரத்தில்..

rain 2

தமிழகம்

உஷார்..!! உஷார்..!! 9 மாவட்டங்களுக்கு 3 மணி நேரத்தில்..

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து பல்வேறு இடங்களில் குளிர்ச்சி நிலவுகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top