கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழைப்பொழிவு கிடைத்துக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழையும் பெய்து வந்தன.
என்ன நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, நீலகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே மேலே குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் தான் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.