9 மாவட்டங்களில் 2 நாட்கள் விடுமுறை! 3 மாவட்டங்களில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அறிவிப்புகள் வெளிக்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இன்றைய தினம் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளிகள் விடுமுறை

இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வருகின்ற நவம்பர் 10 ,11 ஆகிய 2 தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர்,செங்கல்பட்டு ஆகிய  மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளைய தினம் மட்டும் பள்ளி,கல்லூரிகளுக்கு சில மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். அதன்படி சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நாளைய தினம் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இதனால் மூன்று மாவட்டங்களுக்கு நாளைய தினம் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment