News
இரவு 9 மணியுடன் முடியவில்லை மக்கள் ஊரடங்கு: அதிர்ச்சி தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுயஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து தற்போது மக்களின் ஒத்துழைப்பால் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் என சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா நோய் பரவுவதை தடுக்க இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மேற்கொண்ட இந்நிகழ்வில் பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு நிறைவேற உள்ளது
இந்த ஊரடங்கு நிகழ்வில் மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவு படுத்தப்படுகிறது. இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
