9-12 வகுப்புகள் தொடக்கமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

b658acb920140bb5a741ed8c33f5081b

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருகிறது நேற்று 1800 க்கும் குறைவான கோரனோ பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தற்போது கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்ட நிலையில் விரைவில் பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து பேட்டியளித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியபோது 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும் பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே விரைவில் 9 முதல் 12 வகுப்பு கூடிய வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment