நெல்லை டவுன் தைக்கா தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் – மேரி தம்பதிக்கு ஒரு மகளும், 13 வயதில் தருண் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல்ராஜ் உயிரிழந்த நிலையில் தாய் மேரி தனியார் நிறுவனத்தில் பணி செய்து தங்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தருண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தருணுக்கும், அவரது சகோதரிக்கும் இடையே செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் கோபம் அடைந்து தருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்