பள்ளிக்கு செல்ல பயம்.. 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

சேலத்தில் பள்ளிக்கு செல்ல பயந்து 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அடுத்த ஜான்சன்பேட்டையில் வசித்து வருபவர் சிவகுரு. இவருக்கு மகன் உள்ள நிலையில், அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவன் பள்ளிக்கு செல்ல மறுத்து வீட்டியே இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், மாணவரின் பெற்றோர்கள் மகனை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்ப முயற்சித்துள்ளனர்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் மாணவன் பள்ளிக்கு செல்ல தயாராக இருந்த நிலையில், பயத்தின் காரணமாக  திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பல்வேறு கோணங்களில் பெற்றோர்களிடம்  போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment